சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள தென் ஆபிரிக்க வீரர்
தென் ஆபிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன், 33வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இது அவருடைய ஏழு ஆண்டுகால சிறப்பான சர்வதேச பயணத்திற்கு முடிவுகொடுக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
2024ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதையடுத்து, இப்போது ஒருநாள் மற்றும் T20 போட்டிகளிலிருந்தும் விலகுவதாகக் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு, ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அறிமுகமான கிளாசன், தொடர்ந்து வெள்ளை பந்தாட்டத்தில் முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார்.
60 ஒருநாள் போட்டிகளில் 2,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள இவரின் சராசரி 44 ஓட்டங்களாகும்.
2023ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சொந்த மைதானமான SuperSport Park-இல் விளாசிய 174 ஓட்டங்கள், எண் 5 இடத்தில் வந்த வீரர்களில் இரண்டாவது அதிகமான ஓட்டமாகும்.
முக்கிய வீரர்
ஸ்பின் பந்து வீச்சுகளுக்கு எதிரான தாக்குதல் திறனுக்காக புகழ்பெற்ற அவர், 58 T20 போட்டிகளிலும் விளையாடி, 141.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஓட்டங்கள் அடித்துள்ளார்.
தன்னுடைய அதிரடி ஆட்டத்தால், தென் ஆபிரிக்க வெள்ளை பந்தாட்ட அணியில் முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
