வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் காற்று தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த நிலைமைகள்
இதற்கமைய, தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடுமையான காற்று வீசும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை 117 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அறிந்து கொள்ளவோ அல்லது முறையிடவோ முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
