சீரற்ற வானிலையால் ஹட்டன் பகுதியில் 36 குடும்பங்கள் பாதிப்பு
நேற்றைய தினம் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் 319 ஜி கிராம சேவகர் காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 36 குடும்பங்களை சேர்ந்த 200கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை - கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு, மத்திய பிரிவு சிங்காரவத்தை ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்றுடன் வீசிய மழைகாரணமாக பொகவந்தலாவை - எல்பட மேல்பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பு ஒன்றின் கூரை தகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றமையினால் அக்குடியிருப்புகளில் வாழும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
தற்காலிக மண்டபங்கள்
இந்த அனர்த்தம் காரணமாக 75ஆண்களும் 75பெண்களும் மற்றும் 50சிறுவர்களும் உள்ளடங்குவதாக பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அதேவேளை, பாதிக்கப்பட்டு தற்காலிக மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுகளும், பாதிக்கப்பட்டு சொந்த குடியிருப்பில் இருப்பவர்களுக்கு ஒரு தொகை பணமும் நோர்வூட் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட உள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்தது.
குறித்த பகுதியில் பாரி மரமொன்று சரிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தமையினால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக நோர்வூட் பிரதேச சபையின் களஞ்சியசாலையின் அறையின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த அறை முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
