கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி
யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல் ஏற்றி வந்த கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் எதிரெதிரே மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கனரக சாரதி காங்கேசந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், இளவாலை, உயரப்புலத்தை சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
