மணல் ஏற்றச்சென்ற கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்து: சாரதி படுகாயம்
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மணல் ஏற்றச் சென்ற கனரக வாகனமொன்று குடைசாய்ந்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வான்எல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நிசாந்த பெரேரா என்பவரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் கூறியுள்ளனர்.
அதிகவேகம் மற்றும் நித்திரை கலக்கத்தினால் குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி காட்டுப் பகுதியில் குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
