அதிகாலையில் நடந்த கோர விபத்து..! சிறிது நேரம் போக்குவரத்து தடை
இரத்தினபுரி- பெல்மதுல்ல வீதியின் வெலிஹந்த பிரதேசத்தில் உள்ள இரட்டை வளைவுப் பகுதியில், மதுபானங்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(11.05.2026) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனம் விபத்து
பெருமளவிலான மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம், குறித்த இரட்டை வளைவுப் பகுதியில் திரும்ப முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் வாகனத்துக்கும், அதில் ஏற்றி வரப்பட்ட மதுபான போத்தல்களுக்கும் பாரியளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனத்தை வீதியிலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பெல்மதுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு : அடுத்த சில நாட்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மகிந்த..! பின்னணியில் முக்கிய சத்தியக்கடதாசி - சட்டத்தரணிகளுடன் அவசர சந்திப்பு
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam