அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு! அவசர உதவிகளை உடனடியாக வழங்க ஜோ பைடன் உறுதி
அமெரிக்காவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் Texas’ Houston, Austin Dallas, ஆகிய பகுதிகளே பனிபொழிவு காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியை, அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் தேசிய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் சுமார் 13 மில்லியன் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கார்கள், வீதிகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன.
நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன. குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது.
ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், கடந்த நான்கு நாட்களாக சுமார் 34 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மின்தடை காரணமாக பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
