மன்னாரில் கடும் மழை: விடத்தல் தீவில் கிராமங்களுக்குள் புகுந்த கடல்நீர்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது.
இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (7) அதிகாலை பெய்த அடைமழையை தொடர்ந்து கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளது. இதனால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) இன்று காலை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துள்ளார்.
மேலும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியதோடு, உரிய கிராம அலுவலரை சந்தித்து பாதிப்பு தொடர்பாக அறிந்து கொண்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்துள்ளதுடன், தலைமன்னார் கிராம
பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக நேரடியாக சென்று நிலமையை அவதானித்துள்ளனர்.








பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
