சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை
இலங்கையில் இன்று (03.11.2022) காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீட்டர் மழைவீழ்ச்சியும் மட்டக்களப்பில் 9.1 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி வரை மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.

பெரும்பாலான பிரதேசங்கள் மழை
இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்க கூடியதாகவுள்ளது.

பலத்த மழைவீழ்ச்சி
வடக்கு, வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி லீட்டருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை இந்த மழையுடனான கால நிலை 6ம் திகதிவரை தொடர்ந்து காணப்படும் 7ம்திகதி
8 ம்திகதிகளில் படிப்படியாக குறைந்து 9 ம் திகதி மீண்டும் மழைவீழ்சி அதிகரிக்க
கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 11 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri