கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் பல நகரங்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கொழும்பில் 10 நிமிடங்கள் மழை பெய்தால் பல நகரங்கள் நீரில் மூழ்கிவிடுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக 5 நிமிடங்கள் மாத்திரம் பெய்த மழையிலேயே பல நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆமர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் நேற்றைய தினம் நீரில் மூழ்கியதால் பணிக்கு செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
மழை வெள்ளம்
இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 15 நிமிடங்கள் பெய்த மழையால் பிற்பகல் 2 மணி வரை குறித்த நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக மக்கள் இவ்வாறு நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் உடனடியாக தீர்வு வழங்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
