மோசமான வானிலையால் ஒரு இலட்சம் மாணவர்கள் பாதிப்பு! வெளிவந்துள்ள தகவல்..
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாடசாலைகள் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார்.
ஏதோ ஒரு வகையில் சுமார் 100,000 மாணவர்களும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் பாதிப்பு
இருப்பினும், டிசம்பர் 16 அன்று பேரிடரால் கடுமையாக பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தெந்தப் பகுதிகள் மற்றும் எந்தெந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இன்று (08) அல்லது செவ்வாய்க்கிழமை (09) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மீண்டும் திறக்கப்பட்டவுடன், ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகளை 2026 ஜனவரியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.