இன்றும் சில பிரதேசங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை
அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
மத்தியமலை நாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan