இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பலபகுதிகளில் இன்று(7.4.2026) பிற்பகலுக்கு பின்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருணாகல், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இடி மின்னலுடன் கூடிய மழையின் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
அறிவுறுத்தல்
மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இன்று நண்பகல் 12.13 மணிக்கு தெஹிவளை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹெலியகொட, மஸ்கெலிய மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.