மத்திய மலைநாட்டில் கடும் மழையால் வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் காசல்ரி, மவுசாக்கலை, லலக்பான், நவ லக்சபான, பொல்பிட்டிய, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
மேலும், நோர்ட்டன் பிரிஜ் பகுதியில் நேற்று இரவு (24) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நில பகுதியிலும் களனி கங்கைக்கு அருகாமையில் இருப்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மேலும், மழையுடன் அடிக்கடி பனி மூட்டம் காணப்படுவதனால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை
அது மாத்திரமன்றி, தொடர் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் (Hatton) - கொழும்பு (Colombo) பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் மண் திட்டுக்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால், இந்த வீதிகளில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, அடிக்கடி கடும் காற்று வீசுவதனால் மரங்களுக்கு சமீபமாக இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 16 மணி நேரம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
