நுவரெலியாவில் பலத்த மழை: வாகன சாரதிகள் கடும் அவதி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் இன்று(14.10.2026) இடியுடன் கூடிய மழை கொட்டித்தீர்த்துள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகள் எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதுடன் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின.
அத்தோடு, கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றன.மேலும் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பலத்த மழை
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருதால் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற கால்வாய்கள், மதில்கள் காரணமாக நீர் வடிந்தோட முடியாத நிலையில் குளம் போல் தேங்கிய நீரினால் பெரும்பாலான வீதிகளில் பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்கு உள்ளானதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிய அனுமதி - கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்



இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan