இங்கிலாந்தில் நாளை இடியுடன் கூடிய கனமழை - மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என்றும், தெளிப்பு, தேங்கி நிற்கும் நீர் மற்றும் ஆலங்கட்டி மழை போன்றவற்றால் வாகன ஓட்டும் நிலைமை பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு நீண்ட பயண நேரங்களைக் குறிக்கலாம், மேலும் ரயில் சேவைகளில் தாமதமும் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல்கள் சாத்தியமாகும், மேலும் சில கட்டிடங்கள் சேதமடையலாம்.
இடியுடன் கூடிய மழை உருவாகி நகரக்கூடும்
இன்று நள்ளிரவு முதல் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது வியாழன் அதிகாலை முதல் கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் பலத்த, இடியுடன் கூடிய மழை உருவாகி நகரக்கூடும்.
Heavy rain is expected for a time on Thursday morning across East Anglia and southeast England. Large puddles are likely, causing spray on the roads during rush-hour. Much-needed water will pour into those water butts pic.twitter.com/xf4MzYgKLg
— Met Office (@metoffice) August 24, 2022
"10-20 மில்லி மீற்றர் மழை மிகப் பெரிய பகுதியில் பெய்யக்கூடும், ஆனால் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் 30-40 மில்லி மீற்றர் மற்றும் ஆறு மணி நேரத்திற்கு மேல் 50 மில்லி மீற்றர் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் "மின்னல் கூடுதல் ஆபத்தாக இருக்கும் எனவும் வானிலை ஆயு்வு மையம் தெரிவித்துள்ளது.