கனமழை - வெள்ளம் குறித்து பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு கனமழையால் வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தென்மேற்கு பிரித்தானியா மற்றும் தெற்கு வேல்ஸுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது.
இது அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை 6:00 GMT முதல் செவ்வாய்கிழமை 6:00 மணி வரை நடைமுறையைில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை..
தென்மேற்கிலிருந்து பிரித்தானியாவை நெருங்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கனமழையையும், பலத்த காற்றையும் கொண்டு வரும் என்றும், இது புதன்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், "தற்போது, இந்த தாழ்வு மண்டலத்தின் சரியான பாதை, ஆழம் மற்றும் நேரம் நிச்சயமற்றதாக உள்ளது.
இதனால் பலத்த காற்று அல்லது கனமழையால் எங்கு அதிகம் பாதிக்கப்படும் என்பதை தீர்மானிப்பது கடினமாகிறது" என்று வானிலை அலுவலகத்தின் துணை தலைமை வானிலை ஆய்வாளர் ஸ்டீவன் கீட்ஸ் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |