கோர விபத்தில் பலியான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான ஏ.எம். இப்னுல்லாஹ் இன்று (27) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, கிண்ணியா-தம்பலகமுவ சாலையில் வெல்வேலி பகுதியில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நிலவிய மோசமான வானிலை மற்றும் கடும் மூடுபனி காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
பொலிஸார் விசாரணை
மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் வேகமாகச் சென்ற லொறி, எதிர்த் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநரை கிண்ணியா பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சந்தேகநபர் மூதூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam