இந்தியாவில் தொடரும் கனமழையால் 10 பேர் பலி
இந்தியாவின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையினால் தொடருந்து தண்டவாளங்கள் சில நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுமார் 140 தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடருந்து பயணம்
இந்நிலையில், தொடருந்து பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது இந்திய தொடருந்து முகாமை மையம் தெரிவித்துள்ளது.

சிறப்பு தொடருந்துகள் மூலம் சென்னை, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam