கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்-வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சபரகமுவை மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று அவ்வப்போது மழைப் பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவை மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழைப் பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும்.
மத்திய மாலை நாட்டின் மேற்கு மலையடிவாரங்களிலும் வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
