முல்லைத்தீவில் தொடரும் கன மழை: வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலப் பகுதிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட போராளிகளுக்கு நடந்தது என்ன: மன்றில் சிறீதரன் சீற்றம்
வான் கதவுகள் திறப்பு
இந்நிலையில், முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் நேற்றுக் காலை முதல் ஆறு அங்குல அளவில் திறந்துவிடப்பட்டிருந்தது. எனினும், நீர் வரத்து அதிகரித்த நிலையில் இன்று நான்கு வான் கதவுகளும் ஒரு அடி மூன்று அங்குல அளவில் திறந்து விடப்பட்டுள்ளன.
இதேபோன்று தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதோடு சகல குளங்களிலும் வான் பாய்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |