திருகோணமலையில் கடும் பனிமூட்டம்: சிரமத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள்
திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27.02.2026) காலை வேளையில் கடும் மூடுபனி நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் மூடுபனி காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை
காலை வேளையில் ஏற்பட்ட இந்த கடும் மூடுபனி காரணமாக வீதிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் மறைக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன், பிரதான வீதிகளில் பயணித்த வாகன சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். முன்னால் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாத காரணத்தால், வாகனங்கள் தங்களது முன்னிலை விளக்குகளை ஒளிரவிட்டு மிக மெதுவாக பயணித்துள்ளன.
இந்த மூடுபனி நிலை காலை 8.30 மணி வரை நீடித்ததுடன், அதன் பின்னர் வழமையான காலநிலை மீண்டும் துவங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri