இஸ்ரேல் மீது மீண்டும் குறிவைத்த ஈரான்.. ஜெருசலேம் வானில் பாய்ந்த ஏவுகணைகள்!
புதிய இணைப்பு
வடக்கு இஸ்ரேலின் தம்ராவில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹைஃபாவின் கிழக்கே உள்ள நகரத்தில் இரண்டு மாடி வீட்டை ஈரானிய ஏவுகணை தாக்கியதை அடுத்து, ஒரு பெண் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளதுடன் ஏழு பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்காம் இணைப்பு
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்கள் சிறிது நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜெருசலேம் வான்பகுதியிலும் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், ஜெருசலேமில் குறித்த ஏவுகணைகளால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மூன்றாம் இணைப்பு
ஹைஃபாவின் கிழக்கே உள்ள வடக்கு நகரமான தம்ராவில் உள்ள இரண்டு மாடி வீட்டை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன் மேலும், 13 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலியர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்லுமாறு இஸ்ரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என ஈரானியப் படைகள் கலப்பினத் தாக்குதலை நடத்தி வருவதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானின் ஹைஃபா என்ற பகுதியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் சர்வதேச தவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING: Launches from Iran towards Israel!pic.twitter.com/cAi525gWgs
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) June 14, 2025
முதலாம் இணைப்பு
இன்னும் சில மணிநேரங்களில் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதலை ஈரான் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அரச தொலைக்காட்சி, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தும் கடுமையான மற்றும் மிக அழிவுகரமான பதிலடித் தாக்குதல்கள் சில மணி நேரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம், இஸ்ரேல் ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.
பதிலடி
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இலக்குகளை உள்ளடக்கிய முன்கூட்டியே தாக்கும், துல்லியமான, ஒருங்கிணைந்த தாக்குதல் எனவும் ஈரானால் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலளிக்கும் முகமாக நேற்றைய தினம் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிளலிக்க, ஈரான் இன்னும் சில மணிநேரங்களில் இஸ்ரேல் மீது மிக கொடூரமான தாக்குதலை மேற்கொள்ளும் என ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி, இஸ்ரேலிய ஊடகம் ஒன்றும் இந்த தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
