புடினை விமர்சித்த ட்ரம்ப்.. இதுவரை இல்லாத கொடூர தாக்குதலுக்குள்ளான உக்ரைன்
ரஷ்யாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலால் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
728 ட்ரோன்கள் மற்றும் 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள், நாடு முழுவதும் உள்ள நகரங்களை பல அலைகளில் வீசிய ரஷ்யா உக்ரைனை தாக்கியுள்ளது.
சமாதானத்தை அடையவும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில் ரஷ்யாவின் இந்த மிக துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு
உக்ரைனின் தலைநகர் கியேவுக்கு, அமெரிக்கா அதிக ஆயுதங்களை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து இந்த இரவு நேர தாக்குதல் நடந்துள்ளது.
எனவே, இது கடந்த வார போர்நிறுத்த இடைநீக்கத்தை இரத்து செய்வதாகும் எனவும் இவ்விடயம் குறித்து ட்ரம்ப் அறிந்திருக்கவில்லை என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
A new massive Russian attack on our cities. It was the highest number of aerial targets in a single day: 741 targets – 728 drones of various types, including over 300 shaheds, and 13 missiles – Kinzhals and Iskanders. Most of the targets were shot down. Our interceptor drones… pic.twitter.com/Lxa5TdYVXT
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 9, 2025
செவ்வாயன்று, ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது அதிகரித்து வரும் விரக்தியை வெளிப்படுத்தினார்.
A new massive Russian attack on our cities. It was the highest number of aerial targets in a single day: 741 targets – 728 drones of various types, including over 300 shaheds, and 13 missiles – Kinzhals and Iskanders. Most of the targets were shot down. Our interceptor drones… pic.twitter.com/Lxa5TdYVXT
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 9, 2025
"உண்மையை அறிய விரும்பினால், புடின் எங்கள் மீது நிறைய அபத்தமான கருத்துக்களை வீசுகிறார்" என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதேவேளை, இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர், ஆனால் இது இதுவரை உக்ரைனில் போர்நிறுத்தத்தை நோக்கிய உறுதியான நடவடிக்கைகள் எடுக்க தவறிவிட்டனர் - ஒரு நாளில் அதை சாதிக்க முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam