இலங்கையில் பெரும் சோகம் - அதிக வெப்பத்தால் இருவர் பரிதாபமாக மரணம்
அனுராதபுரத்தில் அதிகமான வெப்பம் காரணமாக இரண்டு பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்பாவல பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு வைபவத்தில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் வெப்பத்தை தணிக்க தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி கொண்டால், உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர், வயலில் புல் வெட்ட சென்ற நிலையில், கடுமையான வெப்பத்தை தாங்க முடியாது குளித்ததால் உயிரிழந்துள்ளதாக எப்பாவல திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாலசியம்பலாவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஏ.ஆர்.டி. அத்துல தம்மிக்க, கட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான எல்.ஜீ.விஜேசிங்க ஆகியோரே சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக வெப்ப அதிர்ச்சியால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக எப்பாவல அரச வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி என்.எச். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.