இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
அதிக வெப்பம் காரணமாக சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால் கண்பார்வை பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் கண் சத்திரசிகிச்சை நிபுணருமான மதுவந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கண்புரையின் நிலையும் அதிகரிக்கலாம் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில பிரதேசங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகளவில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
