மக்களே அவதானம்! அதிகரித்த வெப்ப நிலை குறித்து விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
இந்நிலையில், நாளை (17.04.2023) வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதன்படி, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அடிக்கடி நீர் அருந்தவும் , முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும்,இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri