நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில பகுதிகளில் நாளை (28.08.2026) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் (26.08.2026) மிக உயர்ந்த வெப்பநிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெப்பநிலை 36.7°C ஆகப் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் வெப்பநிலை 36.4°C ஆகவும், பொலன்னறுவையில் 36°C ஆகவும் பதிவானது.
உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்
இதற்கிடையில், நாளை முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையைப் பொறுத்தவரை சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை மதியம் 12:11 மணிக்கு, கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர் கோவில் ஆகிய நகரங்களுக்கு நேர் மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீக்கு மேல் கணிசமான கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening