இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் வெளியிடப்படும் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய நோய்களுக்கு உள்ளாகும் மக்களின் வயதுப் பிரிவு சுமார் 40 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி தேசிய வைத்தியசாலையின் இதயநோய் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கே இதய நோய்கள் அதிகம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது 40 வயதுடையவர்கள் மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்களாயின், இதய நோய் ஏற்படுவதற்கு முன்னரே வைத்தியர்களால் தகுந்த முடிவுகளுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் பெரும்பாலானோர் இதய நோய் தாக்கிய பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதய நோய் ஏற்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு, குருணாகல், கண்டி, கராப்பிட்டிய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25