ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரிய மனு விசாரணைக்கு
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய நீதியாரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த குறித்த மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பொதுவாக்கெடுப்பு
குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை 15 ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் எனவே அதனை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர், மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |