சாய்ந்தமருதில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட சுகாதார பணியாளர்கள்
சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினரால் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதையும் அவர்களின் பொதுச்சுகாதாரத்தை உறுதிப்படுத்தி மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிவுறுத்தல்கள்
இதன்போது, பொது சுகாதார பரிசோதகர்களும், பொது சுகாதார மாதுக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போசாக்கு உணவுகளை வழங்கி வைப்பது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் ,குறித்த குழுவினரால் மருதமுனை வைத்தியசாலை பார்வையிடப்பட்டதுடன் நடமாடும் மருத்துவ முகாமை உடன் தொடங்குவதற்கும் பதில் பிரதேச வைத்திய அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகமும் கட்டிடங்களும் பாதிக்கப்பட்ட போதும் உத்தியோகத்தர்களும் உழியர்களும் மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தமை குறிப்பிட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |