வைத்தியசாலைகளில் ஊழியர்களின் மோசமான செயல் - சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
அரச மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிக் டொக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச மருத்துவர்கள்
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலை நேரத்தில் டிக்டொக்கை பயன்படுத்துவது குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அரச மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் டிக்டொக்கில் ஈடுபடுவது போன்ற மூன்று வீடியோக்கள் அமைச்சிற்கு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





கனடாவுக்கு வரப்போகிறீர்களா? இனவெறுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்: இந்தியப் பெண்ணின் கசப்பான அனுபவம் News Lankasri
