வவுனியா நகர பள்ளிவாசலில் திடீர் சோதனை நடவடிக்கை
வவுனியா நகரப் பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொழுகைக்காக ஒன்று கூடியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா நகரப் பள்ளிவாசலில் இன்றைய தினம் தொழுகைக்காக மக்கள் செல்வதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுகாதாரப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வருகை தந்தவர்களின் விபரங்கள் சுகாதாரப் பிரிவினரால் பெறப்பட்டதுடன், கடும் எச்சரிக்கையுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அத்துடன், பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் சுகாதார அறிவுறுத்தல் குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மக்களுடன் தொழுகை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு பள்ளிவாசலின் பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், சுகாதார நடைமுறைளை மீறி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam