புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்(Photos)
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் நேற்று வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் காணப்படுகின்ற சிற்றூண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வழங்குவதாக தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார வைத்தியரின் கருத்து
இதனால் குறித்த சிற்றூண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறும் தரமான உணவுப் பொருட்களை வழங்குமாறும் தெரிவித்து சுகாதார ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது இது சம்மந்தமாக சுகாதார வைத்தியரிடம் வினவியபோது வடமேல் மாகான சுகாதார அலுவலகத்தினால் குறித்த சிற்றூண்டிச்சாலை மாதத்திற்கு நான்கு இலட்சத்து அறுவத்தையாயிரம் ரூபா அடிப்படையில் குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் இது சம்மந்தமான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
