பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை: சஜித் பிரேமதாச
முப்பது வருடகால பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த நாட்டில் தற்போது சுகாதாரத்துறை பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தின் 8ஆவது குழு அறையில் நாடாளுமன்ற குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சி
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.
நிதி விரயம், மோசடி, திருட்டு, முறைகேடு, தரம் குறைந்த மருந்து, மருத்துவ உபகரணங்கள், தகவல்களை மறைத்தல், அரச அடக்குமுறை, அரச பயங்கரவாதம் போன்ற அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி இலவச சுகாதாரக் கொள்கையை அழிக்கும் திட்டத்தில் அரசு ஈடுபட்டுள்ளது.
இவை மட்டுமன்றி நாட்டின் வங்குரோத்து நிலையும் 220 இலட்சம் பொதுமக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |