வவுனியாவில் வங்கி உட்பட பல இடங்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை
வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம், மற்றும் வியாபார நிலையங்கள், உணவகங்களில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பேணாமை மற்றும் முகக்கவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



