காலாவதியான மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல்
காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதற்கு 67 பில்லியன் ரூபாய்கள் அவசியம் என்று சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
எம்ஆர்ஐ ஸ்கேன், லீனியர் எக்சிலரேட்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் மயக்க மருந்து இயந்திரங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்குகின்றன.
இந்த மருத்துவ உபகரணங்களின் ஆயுட்காலம் 2019 முதல் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு
நிதிப் பற்றாக்குறை மற்றும் தொற்றுநோய் பரவல் காரணமாக 2019 முதல் இந்த மாற்றப்படவில்லை.

இந்தநிலையில் சுகாதார அமைச்சு, தமது கோரிக்கையை முன்மொழிவு வடிவில் நிதியமைச்சகத்துக்குத் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சகம் ஒரு தொகை நிதியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மீதமுள்ள நிதி எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan