பிரேரணையை எதிர்கொள்ள தயார்: கெஹலிய சவால்
எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன், ஒருபோதும் ஓடி ஒளியமாட்டேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், சவாலுக்குப் பயந்து பொறுப்பிலிருந்து விலகித் தப்பியோடும் நபர் நான் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுகாதாரத்துறை தொடர்பாக திட்டமிட்டுப் பொய்ப் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
நான் இதுவரை 8 அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளேன்.
சுகாதார அமைச்சராக நாட்டில் 22 இலட்சம் மக்களின் சுகாதாரம் தொடர்பான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
