நாடு முடக்கப்படுகின்றதா! - புதிய சுகாதார அமைச்சரின் நிலைப்பாடு
நாட்டை முழுமையாக முடக்குவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவை புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசி மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பது மட்டுமே தொற்றுநோயை சமாளிக்க ஒரே வழி எனவும் அவர் கூறியுள்ளார்.
வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் கூட கோவிட் வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில் நாடு தழுவிய பூட்டுதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தின,
எனினும், மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அவை தொற்றுநோயை எதிர்கொண்டன. இந்நிலையில், கோவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
சிலர் இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்கி வைக்குமாறு கோருக்கின்றனர். நாங்கள் ஏற்கனவே பல மாதங்களாக நாட்டை மூடிவிட்டோம், ஆனால் மீண்டும் திறந்த பிறகு என்ன நடந்தது?
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் நாளாந்தம் ஊதியம் பெறுபவர்களின் நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
