திருகோணமலையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவகங்கள், பேக்கரிகள்,வியாபார நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது குளிர்சாதன பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை
இதன்போது எட்டு வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பல வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பணியாற்றும் ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழ்களை காட்சிப்படுத்துவதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri