திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாழ். கருவாட்டு கடைகள் (photos)
யாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கருவாட்டு கடைகள் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (12.04.2023) இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் வீதியோரத்தில் தூசுக்களால் மாசடையக்கூடிய வகையில் கருவாடுகள் வைத்திருந்த கடைகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பொது சுகாதார அறிவுறுத்தல்கள்
கருவாடுகளை வைத்து விற்பனை செய்வதாயின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கருவாடுகளை அழுக்கான கறள் படிந்த கம்பிகளில் குத்தி தொங்கவிட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்
இந்த குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இரண்டு வார காலஅவகாசம் பொது சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யவில்லை எனில் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார
பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






