பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் வெளியீடு
பாடசாலைகளை திறப்பது சம்பந்தமான சுகாதார வழிக்காட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளருக்கு இன்று வழங்கியுள்ளார்.
இந்த சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களை கல்வியமைச்சு பாடசாலைகளுக்கு வழங்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய பல விடயங்கள் அந்த வழிக்காட்டல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.