டெங்கு பரவல் தொடர்பில் பிரதமரின் கருத்தை நிராகரிக்கும் சுகாதார நிபுணர்கள்
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் டெங்குத் தொற்று குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்துக்களைச் சுகாதார நிபுணர்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் டெங்குநோய் தொடர்பில் அண்மைக்காலமாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோர் முறையே புதிய வைரஸ் திரிபு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் திரிபு ஆகியவையே டெங்குப் பரவலுக்குக் காரணமாக இருப்பதான கருத்தொன்றை சமூகமயப்படுத்த முற்படுகின்றனர்.
எனினும் அவ்வாறான கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொற்று அதிகரிப்பு
இது குறித்துத் கருத்துத் தெரிவித்த சிறுவர் நோய் குறித்த மருத்துவ ஆலோசகர், குமார் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள எந்தவொரு ஆய்வுகூடத்திலும் புதிய டெங்கு வைரஸ் திரிபு கண்டறியப்படவில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

அண்மைய தொற்று அதிகரிப்புக்கு ஏதேனும் புதிய வைரஸ் திரிபு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான கூற்றுகளை எவராலும் நிரூபிக்க முடியவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர் உதித விஜேவிக்ரமவும் புதிய திரிபு பரவுவதாகக் கூறப்படும் கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார்.
அறிவுறுத்தல்
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் கருத்துக்கள் தொடர்பாகவே சுகாதார நிபுணர்கள் இந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.

வைரஸ் செரோடைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட டெங்கு வைரஸ் திரிபு இலங்கையில் இருப்பதற்கு எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை என்பதைச் சுகாதார நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan