அதிகாிக்கும் கொரோனாத் தொற்று - சுகாதார அமைச்சின் கவலை
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கும் போக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் தொற்றுநோயை தீவிரமாக எடுத்து, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் புதிய அலைக்கு அது வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சின் மேலதிகச்செயலாளா் வைத்தியா் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்துள்ளாா்.
தடுப்பூசி போடுவதால் மட்டும் நோய்த்தொற்றைத் தடுக்க முடியாது என்று அவா் குறிப்பிட்டுள்ளார். கொரோனா இறப்புகள் மற்றும் தொற்றுக்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன,
கடந்த வாரம் 89 உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் 3,528 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை, இந்த வாரம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,
கடந்த வெள்ளிக்கிழமை 23 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவா்.
கடந்த வாரத்தில் கொரொனாத் தொற்றாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது.
அது, திங்கட்கிழமை 626 ஆகவும், செவ்வாய்கிழமை 629 ஆகவும், புதன்கிழமை 718 ஆகவும், வியாழக்கிழமை 693 ஆகவும், வெள்ளிக்கிழமை 715 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam