முல்லைத்தீவு பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனைகள் (Photos)
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விஜயம் மேற்கொண்டு பாடசாலை சுகாதாரம் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
சுகாதார ஆலோசனைகள்
குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சுகாதாரம் சம்பந்தமாக மேற்பார்வை செய்து தொற்று நோய்கள் தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நட்டாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,பாலிநகர் குமாரசுவாமி வித்தியாலயம் பாலிநகர் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு பாடசாலை சுகாதாரம் சம்பந்தமாக மேற்பார்வை செய்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






