சம்மாந்துறையில் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தினமும் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு விதி மீறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று (21.01.2026) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வாராந்த வர்த்தக நிலையப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 3 உணவகங்கள் மற்றும் 5 பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டன.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில் பொதுச் சுகாதார நடைமுறைகளை முறையாகப் பேணாத 3 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு தேநீர்க்கடையை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எனவே, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைச் சீராகப் பேணுவதை உறுதிப்படுத்துமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.



கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri