மேல் மாகாணத்தில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் உயிர் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க செயற்படாத மேல் மாகாணத்தின் நிர்வாக அதிகாரிகள் அல்லது தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேல் மாகாணத்தில் அமைந்துள்ள அலுவலகங்களின் வளாகங்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நேற்று வரை 9 ஆயிரத்து 495 தனியார் மற்றும் அரச நிறுவனங்களை அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 837 க்கும் மேற்பட்ட வளாகங்களை அதிகாரிகள் ஆய்வுசெய்ததாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
