வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டியில் சடலங்கள் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாது காணப்படும் இந்த சடலம், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி - மெரைன் ட்ரைவ் கடற்கரையிலும் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
