முழுமையான அதிகாரங்களுடன் கூடிய பிரதானியை நியமித்த ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முழுமையான அதிகாரங்களை வழங்கி தனது ஊழியர்கள் குழுவின் பிரதான அதிகாரியை நியமித்துள்ளார்.
இதனடிப்படையில் அனுர திஸாநாயக்கவை தனது ஊழியர்கள் குழுவின் பிரதான அதிகாரியாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான சமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் இந்த நியமனம் சம்பந்தமான ஆலோசனையை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்ச தனது செயலாளராக அனுர திஸாநாயக்கவையே நியமிக்க திட்டமிட்டிருந்தார்.
எனினும் குடும்பத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக பி.பீ. ஜெயசுந்தரவை தனது செயலாளராக நியமிக்க நேரிட்டது.
ஜெயசுந்தர பதவி விலகிய பின்னர் மீண்டும் அனுர திஸாநாயக்கவை நியமிக்க ஜனதிபதி திட்டமிட்டிருந்த போது, ராஜபக்ச குடும்பத்தினர், காமினி செனரத்தை நியமிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து அனுர திஸாநாயக்க அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜனாதிபதி முழுமையான அதிகாரங்களுடன் அனுர திஸாநாயக்கவை தனது ஊழியர்கள் குழுவின் பிரதானியாக தற்போது நியமித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 49 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
