பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு
தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமக்கு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. அதற்கமைய, எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்த பின்னரே செல்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பதவி விலக மறுப்பு
எனினும் தான் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவைப் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்னதாக சென்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது என Bloomberg செய்தி சேவை உடனான நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எனினும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் 50 நாட்களை கடந்து செல்கின்றன.
ஜனாதிபதிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
அதேவேளை எதிர்க்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் கோடடாபயவின் பதவி விலகலை வலியுறுத்தி வருகின்றன.
மறுபுறத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video